Tuesday, September 29, 2015

முழு மானியத்தில் சொட்டு நீர் பாசனம்: விவசாயிகளுக்கு அழைப்பு


முழு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பல்லடம் வட்டார விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்லடம் தோட்டக்கலைத்துறை அலுவலர் மோகன் கூறியது:
தக்காளி, மிளகாய், கத்தரி, காலிபிளவர், பீட்ரூட் போன்ற தோட்டப் பயிர்களை பயிரிட்டுள்ள சிறு, குறு விவசாயிகள், அரசின் மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம். 5 ஏக்கருக்கும் குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க முழுமையாக மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட நிலம் உள்ளவர்களுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும். சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை , இரண்டு புகைப்படம், வரைபடம், மண் மாதிரி, நீர் மாதிரி, வி..., சான்றுடன், பல்லடம் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment