உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.5.25 கோடி கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு
சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. உடுமலை, குமரலிங்கம், கணியூர், ஆலைப் பகுதி, பழனி கிழக்கு,
மேற்கு, நெய்க்காரபட்டி, பல்லடம் என எட்டுக் கோட்டங்களில் உள்ள பதிவு செய்த சுமார்
1,500 விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்புகள் பெறப்படுகின்றன.
இந்நிலையில் நடப்பாண்டில் கரும்பு பயிரிட கூட்டுறவுச்
சங்கங்கள் மூலம் கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி தமிழக அரசு, கரும்பு விவசாயிகளுக்கென ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து
அதை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்க முடிவு செய்ததுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுச் சங்க உயர் அதிகாரிகள் கூறியது:
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு
நடப்பாண்டில் கரும்பு பயிரிட சிறப்பு இனமாக ரூ.5.25 கோடி கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள 8 தொடக்க
வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் இருந்து இந்தக் கடன்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
கரும்பு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை
ஆலை விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ.5.25 கோடி கடன்
வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு
சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. உடுமலை, குமரலிங்கம், கணியூர், ஆலைப் பகுதி, பழனி கிழக்கு,
மேற்கு, நெய்க்காரபட்டி, பல்லடம் என எட்டுக் கோட்டங்களில் உள்ள பதிவு செய்த சுமார்
1,500 விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்புகள் பெறப்படுகின்றன.
இந்நிலையில் நடப்பாண்டில் கரும்பு பயிரிட கூட்டுறவுச்
சங்கங்கள் மூலம் கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையொட்டி தமிழக அரசு, கரும்பு விவசாயிகளுக்கென ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து
அதை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்க முடிவு செய்ததுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுச் சங்க உயர் அதிகாரிகள் கூறியது:
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு
நடப்பாண்டில் கரும்பு பயிரிட சிறப்பு இனமாக ரூ.5.25 கோடி கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள 8 தொடக்க
வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் இருந்து இந்தக் கடன்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
கரும்பு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.
No comments:
Post a Comment