கோழிகளுக்கு வெப்பம் குறைந்த நேரங்களில் தீவனமிட
வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்தி: அடுத்த 3 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும். சில இடங்களில் லேசான மழை இருக்கும்.
தென்மேற்கு பருவ மழையின் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும்,
அதன் தாக்கம் சற்றே அதிகரித்து மேகமூட்டத்துடன் காணப்படும்.
கோழிகளில் வெப்ப அயற்சி காணப்படும். தீவன எடுப்பும்
இயல்பைவிட குறையக் கூடும். இதனால், அடுத்த பருவ மழைக்காலம் தொடங்கும் வரை, தீவனத்தில்
முட்டை உடைவதைக் குறைக்க சோடா உப்பினை டன்னுக்கு 2 கிலோ வரை சேர்க்க வேண்டும். தீவன
எடுப்பைத் தூண்டும் வகையில் வெப்பம் குறைந்த நேரங்களில் தீவனமிடுவதும் சிறந்தது.
No comments:
Post a Comment