திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவத்தில்,
1,23,376 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய கூலி தொழிலாளர்களின் பற்றாக்குறையால்
நெல் நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.இதை நிவர்த்தி செய்ய, இயந்திர நெல் நடவு
முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு
மானியமாக, 2.47 ஏக்கருக்கு 3,000 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்ட துவக்க
விழா நேற்று, திருவள்ளூர் அடுத்த, மேலானுார் கிராமத்தில் நடந்தது. நெல் நடவு இயந்திரத்தை
இயக்கி நடவு முறையை ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். பின், புன்னப்பாக்கம்
கிராமத்தில், இயந்திர நெல் நடவு செய்யப்பட்ட வயல்களை பார்வையிட்ட ஆட்சியர், பின்னேற்பு
மானியத்தினை விவசாயிகளுக்கு வழங்கினார்.
No comments:
Post a Comment