ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மானாவாரி விவசாய பணிகள் தொடங்கியுள்ளது.
மானாவாரி விவசாயம்
தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதுமான மழை இல்லாத காரணத்தால் விவசாய பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டது. ஆற்றங்கரையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் மட்டுமே விவசாயம் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு கோடையில் ஆண்டிப்பட்டி பகுதிகளில் ஓரளவு மழை பெய்த நிலையில் மானாவாரி விவசாயம் நடைபெற்றது.
ஆனால் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்த காரணத்தால் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகளும் அவற்றை காப்பாற்ற முடியாமல் தவித்து வந்தனர்.
பலத்த மழை
இந்நிலையில் ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்யும் பணிகளை விவசாயிகள் மீண்டும் தொடங்கி உள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்பதால் மானாவாரி விவசாயிகள் தங்களின் நிலத்தை உழுது, கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக தரிசாக கிடந்த நிலத்தையும் தற்போது உழவு செய்து வருகின்றனர். இதேபோல ஆற்றுபாசனப்பகுதிகளிலும் காய்கறி சாகுபடி தொடங்கப்பட்டு உள்ளது.
Source : Dailythanthi
No comments:
Post a Comment