வேளாண்மையில் நவீன பண்ணைக்கருவிகள்: நம் நாட்டு வேளாண்மைக்குத் தகுந்தவாறு பல்வேறு ஆராய்ச்சி
நிறுவனங்கள் வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வாயிலாக பெரும்பாலான
விவசாய கருவிகள் நம் விவசாயிகள் பயன்படுத்த பெரிதும் வழிவகை செய்கின்றன. உழவு முதல்
அறுவடை பின் நேர்த்தி வரை பல்வேறு இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உருவாக்கப்பட்டு,
அரசாங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தரப்பட்டு வேளாண் உற்பத்தி செலவை
குறைக்க உதவுகின்றன.
உழவிற்கு பயன்படும் கருவிகள், விதை விதைக்கும் கருவிகள், களை மற்றும் இடை உழவு கருவிகள், பயிர் பாதுகாப்பு கருவிகள், அறுவடை கருவிகள், அறுவடைக்கு பின் செய்நேர்த்தி கருவிகள் செயல்பாட்டில் உள்ளன.
நன்செய் நிலங்களில் நேரடி நெல் விதைக்கும் கருவி, இறவையில் டிராக்டர் கொத்துக் கலப்பையுடன் இணைந்த விதை விதைக்கும் கருவி, நெல் நாற்று நடும் கருவியான, யான்ஞி சக்தி நாற்று நடும் கருவி, யான்மாக் நாற்று நடவு இயந்திரம், கொரியாவகை நடந்து இயக்கும் நடவு இயந்திரம், நெற்பயிரில் களை எடுக்கும் கருவி, விசை களையெடுப்பான், இன்ஜினால் இயங்கும் நெல் அறுவடை இயந்திரம் ஒன்றுபட்ட நட்டு அறுவடை செய்யும் இயந்திரம் செயல்பாட்டில் உள்ளன.
தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடியில் பயன்படும் குழித்தட்டில் விதையிடும் கருவி, காய்கறி நாற்றுக்கள் உற்பத்திக்கான குழித்தட்டில் விதையிடும் தானியங்கி கருவி, டிராக்டரினால் இயங்கும் காய்கறி நாற்று நடக்கூடிய இயந்திரம், டிராக்டரினால் இயங்கும் குழி தோண்டும் கருவி, சுழலும் மண்வெட்டி, களை எடுக்கும் கருவி, வாழை இலை அறுவடை செய்ய உதவும் தாங்கும் சாதனம், டிராக்டரில் இயங்கும் வாழைக்கட்டைகளை அகற்றும் கருவி, மரங்களிலிருந்து மா, சப்போட்டா, கொய்யா பழங்களை பறிப்பதற்கான கருவிகள், தென்னை மரம் ஏறும் கருவி, மஞ்சள் கரணை பிரித்தெடுக்கும் கருவி, மஞ்சள் அறுவடை செய்யும் கருவி, டிராக்டரால் இயங்கும் மரவள்ளிக் கிழங்கை தோண்டி எடுக்கும் கருவி, தேங்காய் பறிப்பதற்காக உயர்மட்டத் தளம், மானாவாரி சாகுபடிக்கேற்ற கருவிகளை தவிர இன்னும் பலப்பல இயந்திரங்கள் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு விவசாயிகளின் இயந்திரமயமான விவசாயத்தை மேற்கொண்டு முன்னேற்றம் பெறலாம். மேலும் விபரங்களுக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை இயந்திரவியல் ஆராய்ச்சி மையம், வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி : 0422 - 245 7576.
பதநீர் : பனையின் முதன்மையான விளைபொருள் பதநீர். பனையின் ஆண் மற்றும் பெண் மஞ்சரிகளில் இருந்து பதநீர் எனப்படும் சுவை மிகுந்த சாறு கிடைக்கிறது. பதநீர் சுவையாகவும், ஓரளவு அமிலத்தன்மையுடனும் இருக்கும். காலைப் பதநீரும், மாலைப்பதநீரும் பருகுவதற்கு சுகம். பதநீர் கிடைக்கும் இடங்களில், குறிப்பாக மழை மற்றும் காற்று காலங்களில் பதநீரின் தரம் குறையும். ஒரு பனையிலிருந்து 3 முதல் 5 மாதங்கள் வரை பதநீரைப் பெறலாம். இதில் 3 மாதங்கள் அதிக அளவில் பதநீர் கிடைக்கும். பானைகளிலிருந்து பதநீரைப் பெற ஏதுவாக சில ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்தி விட வேண்டும். பனையில் 30 சதம் வரை ஓலைகளை வெட்டுவதால் பதநீர் உற்பத்தி மற்றும் பதநீர் சுரப்புக் காலம் அதிகரிக்கும்.
பெண் பனைகள் ஆண் பனைகளைக் காட்டிலும் 33 சதம் முதல் 50 சதம் வரை அதிகம் பதநீரை தரும். ஆண் பனைகளில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையும், பெண் பனையில் பிப்ரவரி முதல் மார்ச் வரையிலும் பதநீர் கிடைக்கும். ஒருபனை மரம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 60 லிட்டர் பதநீர் தர ஆரம்பிக்கும். இது அடுத்தடுத்த ஆண்டுகளில் 70,80,90,100 லிட்டர் பதநீர் எடுக்கலாம். பனை மரத்தில் ஆயுள் ஏறத்தாழ 150 ஆண்டுகள்.
பதநீரை காய்ச்சி அது பாகுபோல் ஆனதும், அந்தப்பாகினை மணல் தரையில் விசாலமான சிரட்டை (தேங்காய் ஓட்டின் ஒரு பாதி) மேல் மேல் நோக்கி இருக்குமாறு அதனைப்புதைத்து அதனுள் பாகினை ஊற்ற வேண்டும். பின்னர் அந்தப்பாகு ஒன்றிரண்டு நாட்களில் நன்கு கட்டியாக மாறும் வரை, அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன்பின் ஒவ்வொரு சிரட்டையையும் எடுத்து, தலைகீழாக வைத்து ஓரத்தில் ஒரு தட்டு தட்டினால் உள்ளிருக்கும் கருப்பட்டி, அச்சிலிருந்து விழும் சர்க்கரைப் போல் விழுந்து விடும். கருப்புக் கட்டிகளை பின்னர் கசிந்து விடாமல் இருக்க புகைப்பதனம் செய்யலாம். பதனம் செய்த கருப்பட்டிகளை பல மாதங்கள் கெடாமல் சேமித்து வைக்கலாம். இன்று 10 கிலோ கருப்பட்டியின் விலை ரூ.1500 - 1600.
கருப்பட்டி முழுக்க முழுக்க இயற்கையானது. உடல் நலத்திற்கு ஏற்றது. ஒரு துண்டு கருப்பட்டியை கடித்து அரை சொம்பு தண்ணீரைக் குடித்தால் பசியாறும். மேலும் விபரங்களுக்கு: பேராசிரியர் வெ.சுந்தரராஜ், அலைபேசி : 90030 13634.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

No comments:
Post a Comment