பந்தலுார்: பந்தலுார் அருகே கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு புதிய முறையில் தண்ணீர் தெளிப்பு பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பந்தலுார் அருகே கொளப்பள்ளி குறிஞ்சிநகர் பகுதியில் சாலையோரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நடவு செய்த மரங்களை பாதுகாப்பாக வளர்க்கும் வகையில் அதனை சுற்றி தடுப்பு அமைத்துள்ளனர். மேலும், கோடை வெயிலில் செடி கருகாமல் பாதுகாப்பாக வளரும் வகையில், அதன் மேல் பகுதியில் ஒரு 'பிளாஸ்டிக்' டப்பாவில் தண்ணீர் ஊற்றி அதனை சொட்டுநீர் பாசன முறையில் தெளித்து வருகின்றனர். இதனால், மரக்கன்றுகள் காய்ந்து போகாமல் செழிப்பாக வளரும் தன்மையை பெற்றுள்ளது.
இதே நிலையில் சேரங்கோடு முழுவதும் பின்பற்றி, அந்தந்த பகுதி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் இளைஞர் மன்றங்களிடம் ஒப்படைத்தால், மரக்கன்றுகளும் நல்ல நிலையில் வளரும் என்பதுடன், வீணாகி குப்பையில் வீசியெறியும் பிளாஸ்டிக் டப்பாக்களும் வீணாகாமல் பயன்படுத்தடும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source : Dhinamalar
No comments:
Post a Comment