டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக 2,600 டன்கள் யூரியா உரம் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தது.
தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சம்பா சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. இதற்குத் தழைச்சத்து உரமான யூரியா அதிக அளவில் தேவைப்படும். இதற்காக விசாகப்பட்டினத்திலிருந்து சரக்கு ரயிலில் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 2,600 டன்கள் யூரியா உரம் தஞ்சாவூருக்கு சனிக்கிழமை வந்தது. பின்னர், இங்கிருந்து தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
Source : Dhinamani
No comments:
Post a Comment