Wednesday, September 2, 2015

நாட்டுக் கோழி வளர்ப்புக்கு 25% அரசு மானியம்



அரியலூர் மாவட்டத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு 25% மானியம் வழங்கப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.
  அரியலூர் மாவட்டத்தில் கோழி அபிவிருத்தித் திட்டம் 2015 - 16 ன் கீழ் நாட்டுக்கோழிகள் (Native Chicken) 25% மானியத்தில் வளர்க்க ஆர்வமுள்ள, தகுதியான விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள், கோழி கொட்டகை அமைக்க வேண்டும். ஒரு கோழிக்கு 1 சதுர அடி அடிப்படையில் 250 கோழி வளர்க்க 250 சதுர அடி இடம் தேவைப்படும். 250 கோழிகள் வளர்க்க செலவு மற்றும் ஒரு அலகின் மதிப்பு ரூ.1,29,500 ஆகும்.
  ஒரு நாள் வயதுள்ள நாட்டுக்கோழி குஞ்சுகளை வாங்கி 12 - 14 வாரங்கள் வளர்த்து விவசாயிகளே விற்பனை செய்யலாம். இதேபோல்,வருடத்துக்கு 3 முறை விற்பனை செய்ய இயலும். சுய முதலீடு (அ) வங்கிக் கடன் மூலம் நாட்டுக்கோழி
வளர்ப்பவர்களுக்கு அரசு மானியம் 25% (ரூ. 32,375) முன் மான்யமாக வழங்கப்படும். ஒரு பயனாளி அதிகபட்சமாக 500 நாட்டுக்கோழிகள் வளர்க்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம், உதவி இயக்குநர் அலுவலகம் (அ) மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 94439 54958, 94450 01207 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என  ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://www.dinamani.com/edition_trichy/ariyalur/2015/09/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-25-/article3006357.ece

No comments:

Post a Comment