Monday, September 28, 2015

தோட்டக்கலை கல்லூரியில் விதைகளை வாங்க ஆர்வம் :



பெரியகுளம்:பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரியில் தானியங்கி கருவியில் பத்து ரூபாய் செலுத்தி, விதை பாக்கெட்டுகளை பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தானியங்கி விதை வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட காய்கறி மற்றும் மலர் பயிர்களின் விதைகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தானியங்கியில் பெறுகின்றனர். தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம், பாகல், புடலை, பீர்க்கும், பூசணி உட்பட காய்கறி விதைப்பாக்கெட்டுகள் கிடைக்கும். தானியங்கி விதை வழங்கும் கருவியில், ரூபாய் பத்து செலுத்தி, தங்களுக்கு தேவையான விதை பாக்கெட்டுகளை தேர்வு செய்து அதற்குரிய எண்களை அழுத்தி விதைகளை பெறலாம்.

தானியங்கி கருவி குளிரூட்டப்பட்ட வசதியுள்ளதால் விதைகள் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கு பொதுமக்களும், பண்ணைக்கு விவசாயிகளுக்கும் அதிகளவில் விதை பாக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர்.

Source : Dhinamalar

No comments:

Post a Comment