Tuesday, September 29, 2015

சின்ன சின்ன செய்திகள்



பால் உற்பத்தியில் செலவை குறைக்க இயந்திரமயமாக்கல்: கால்நடை வளர்ப்புக்கு தேவையான பசுந்தீவன உற்பத்தி செய்ய தெளிப்பு நீர் பாசனமுறையை பயன்படுத்தி குறைந்த தண்ணீர் செலவில் தீவன உற்பத்தியை செய்யலாம். தீவன வயல்களில் சிறு டிராக்டர்கள் பவர் டிரில்லர்கள், பெரிய டிராக்டர்கள் சென்று வரும் அளவுக்கு போதிய இடைவெளி விட்டு பயிர்களை விதைக்க வேண்டும்.
மொபைல் ஷ்ரெட்டர் என்கிற பெயரில் கிடைக்கும் இயந்திரத்தில் சிறு மாறுதல் செய்து விட்டால் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் தீவன அறுவடை செய்தால் மற்றும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி டிராக்டர் டிரைலர்களில் கொட்டுதல் போன்ற கடுமையான வேலைகளை எளிதில் செய்யலாம். சிறிய பண்ணையாளர்கள் "பிரஷ் கட்டா' என்னும் இயந்திரத்தை பயன்படுத்தி தீவனம் அறுவடை செய்யலாம். அறுவடை செய்ய தீவனத்தை "சாப்ட்கட்டா' மூலம் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுக்கலாம். தற்பொழுது பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும், தானியங்களை தூளாக அரைத்து கலப்பு தீவனம் உற்பத்தி செய்யவும் ஒரே இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பண்ணைகளிலிருந்து சாணத்தை அப்புறப்படுத்துவது ஒரு அதிக சக்தி செலவாகும் கடினமான வேலை. சாணத்தை அப்புறப்படுத்துவதற்கு "ஸ்குரு கன்வேயர்' முறையை பயன்படுத்தலாம். இந்த முறையில் பண்ணையிலிருந்து சாணத்தை "ஸ்குரு கன்வேயர்' மூலம் எரு குழிக்கோ அல்லது சாண எரிவாயு குழிக்கோ நேரடியா எடுத்துச் செல்லலாம். சாணத்தை குழிக்குள் தள்ளி விட மட்டும் ஆள் தேவை. "சாண எரிவாயு' சாணத்திலிருந்து வெளியேறும் கழிவை போதுமான தண்ணீர் கலந்து "ஸ்லர்ரி பம்ப்' மூலம் பசுந்தீவன சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.
பால் கறவை இயந்திரத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒரு வகை கன்று மடியில் பாலைக் குடிப்பது போல செயல்படுவது. மற்றொரு வகை மடியிலிருந்து பாலை மெதுவாக உறிஞ்சும். நாளொன்றுக்கு 10 லிட்டருக்கு மேல் கொடுக்கும் மாடு களுக்கு முதல் வகை இயந்திரத்தையும் 10 லிட்டருக்கு குறைவாக பால் தரும் மாடுகளுக்கு இரண்டாவது வகை இயந்திரத்தையும் பயன்படுத்தலாம். மடியில் பால் சுரப்பு குறைந்தவுடன் இயந்திரத்தை மடியில் இருந்து எடுத்து விட வேண்டும். சுகாதாரமாக கறக்கும் பாலை நேரடியாக குளிரூட்டம் 4 டிகிரி செய்து பாக்கெட் போடும் இயந்திரத்திற்கு அனுப்பி பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம். தகவல் : .குமரேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி. அலைபேசி : 94434 43346.

மகோகனி: மரத்தின் சிறப்புகள் பற்றி கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் பயிர் பெருக்கு நிறுவனத்தின் விதை தொழில்நுட்பவியல் துறை விஞ்ஞானி முனைவர் .வே.துரை, வழங்கும் செய்தி. "மகோகனி' இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மரத்துக்காகவும், அலங்கார மரமாகவும் பயிரிடப்பட்டது. தற்போது மிகவும் பழமையான மகோகனி மரங்கள் அதிக அளவில் தென்னிந்தியாவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காணப்படுகின்றன.
சிறந்த மர வேலைகளுக்கு மட்டுமல்ல, மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. நீரிழிவு நோய், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலேரியா, இருமல் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களைக் குணப்படுத்த மலேசிய மக்கள் பல தலைமுறையாக இம்மரத்தை பயன்படுத்தி வருகின்றனர். வெள்ளை நிறத்தில் உள்ள காய்ந்த மகோகனி விதைகள் மிகவும் கசப்புத்தன்மை உடையவை. தினமும் ஒன்று அல்லது இரண்டு முழு மகோகனி விதைகளைச் சாப்பிடலாம். இதை உணவு உட்கொள்வதற்கு அரைமணி நேரம் முன்பாக உண்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வந்து விடும். மேலும் மகோகனி விதையில் புற்றுநோய், நெஞ்சுவலி, குடல்புண் போன்ற நோய்களையும் குணப்படுத்தும் தன்மை உள்ளது. மகோகனி பழம் வைட்டமின்களை A, B1, B6, D மற்றும் E நார்ச்சத்து, போலிக் அமிலம், புரதம் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துணவும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் "தேன்கொட்டை' என்ற பெயரில் இந்த விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்புக்கு: அலைபேசி 94459 44288.

பனிவரகு தோசை: தேவையான பொருட்கள்: பனி வரகு- 1கப், உளுந்து- 1/4 கப், வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, மிளகு-1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப; எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை - பனிவரகு, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 4 மணி நேரம் ஊற விடவும். பிறகு மிளகு சேர்த்து மெதுவாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும். 2 மணி நேரம் புளிக்க விட்டு, பின் மெல்லிய தோசைகளாகச் சுட்டு சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: மிளகுக்குப் பதில் பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கலாம்.
தகவல்: கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்,
S3, B Block, Ponni Apartments 10-/4,
Ganapathy 1st Street,
Avvai Nagar, Thiruvanmiyur,
Chennai-600 041.

No comments:

Post a Comment