விதைப் பண்ணை அமைப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு வரும் டிசம்பரில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் நாகை ஆட்சியர் சு. பழனிசாமி.
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 50,000 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பும் 88,900 ஹெக்டேரில் நடவும் என மொத்தம் 1,38,900 ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 19,579 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பும், திருந்திய நெல்சாகுபடி முறையில் 2580 ஹெக்டேர் மற்றும் சாதாரண முறையில் 1845 ஹெக்டேர் ஆக மொத்தம் 4425 ஹெக்டேர் நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சம்பா பருவத்தில் பாய் நாற்றங்கால் 70 ஹெக்டேர் சாதாரண நாற்றங்கால் 705 ஹெக்டேர் ஆக மொத்தம் 775 ஹெக்டேர் நாற்றங்கால் இருப்பில் உள்ளது.
வேளாண்மைத் துறையில், சான்று பெற்ற நெல் விதைகள் 468 மெ. டன்களும், தனியார் விதை விற்பனை நிலையங்களில் நெல் விதைகள் 636 மெ. டன்களும் இருப்பில் உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் யூரியா 6060, டிஏபி 2808, பொட்டாஷ் - 1460, காம்ப்ளக்ஸ் - 407 ஆகிய உரங்கள் இருப்பில் உள்ளன.
விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ. 10 மான்யத்தில் 430 மெ.டன் நெல் விதை வழங்க இலக்கு பெறப்பட்டு, நெல் விதை விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமான பயறு வகைகளை விதைப் பண்ணைகள் மூலம் கொள்முதல் செய்ய விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி டிசம்பர் மாதத்தில் அளிக்கப்பட உள்ளது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. பெஞ்சமின்பாபு, வேளாண்மை இணை இயக்குநர் டி. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source : Dhinamani
No comments:
Post a Comment