குறுவை நெல் சாகுபடியில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் சாரநாத் பாபு வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் வட்டாரங்களில் குறுவை நெல் சாகுபடி 6,971 ஹெக்டரில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிர் வளர்ச்சி மற்றும் பூக்கும் தருணத்தில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் நெல்லில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது.இதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மஞ்சளான பழுப்புநிற இறக்கை உடைய தாய் அந்து பூச்சி இலையில் மஞ்சளான நிறத்தில் முட்டை இடுகின்றன. இதிலிருந்து வெளிவரும் புழு, பச்சை நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டதாக இருக்கும். இலை சுருட்டுப்புழு தாக்கிய இலை,
நீளவாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். இலை வெள்ளையாக மாறி காய்ந்து விடும். அம்பை-16 ரகத்தில் இதன் தாக்குதல் அதிகமாக உள்ளது.
இதைக் கட்டுப்படுத்த, தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரங்களை இடுவதைத் தவிர்க்க வேண்டும். இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிகமாக இருந்தால் வேளாண் துறையினரின் ஆலோசனையைப் பெற்று மருந்து தெளிக்கலாம் என்றார்.
http://www.dinamani.com/edition_madurai/madurai/2015/09/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article3053324.ece
No comments:
Post a Comment