Tuesday, September 29, 2015

டெல்லியில் பசுமை மற்றும் சமையல் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிப்பு



 புதுடெல்லி: பசுமை கழிவுகள் மற்றும் சமையல் கழிவுகளைக் கொண்டு உரம் மற்றும் இயற்கை எரிவாயுவை தயாரிக்கலாம் என பசுமை ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். செடி, மரங்களிலிருந்து விழும் இலைகள், புற்கள் உள்ளிட்ட பசுமை கழிவுகளையும், சமையல் கழிவுகளையும் சேர்த்து ஸ்வாலம்பன் என்ற நிறுவனம் மூலம் உரம் தயாரித்துவரும் நிபுணர் நரேந்தர குமார் கூறியதாவது: பூங்கா மற்றும் சமையல் கழிவுகளைக் கொண்டு பயனுள்ளதாக உபயோகிக்கும் வகையில் உரம் மற்றும் இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் தினமும் கழிவுகள் எறியப்படுகின்றன. இதனை சேகரித்து சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் உரம், இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது.இத்திட்டத்தை செயல்படுத்த 300 வீடுகளுடன் கைகோர்க்கப்பட்டுள்ளது. தற்போது குடியிருப்பு அருகில் உள்ள பூங்காக்களில் மட்டுமே உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்த டெல்லி மேம்பாட்டு ஆணையத்திடம் 4-5 இட வசதிக் கொண்ட பூங்காக்கள் வழங்கும்படி காரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பெரிய அளவில் கொண்டுவர மூன்று மாநகராட்சிகள் மற்றும் மாநில அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு நரேந்தர குமார் கூறினார்

No comments:

Post a Comment