இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம்,
புதுச்சேரியில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக, ஓரிரு மாவட்டங்களில் இடியுடன்
கூடிய பலத்த மழை பதிவானது.
கடந்த 24 மணி நேரத்தில் கரூரில் 60 மி.மீ, திண்டுக்கல் மாவட்டம் - நிலக்கோட்டையில் 50 மி.மீ, விருதுநகர் மாவட்டம் - சாத்தூரில் 40 மி.மீ, பெரம்பலூர் மாவட்டம்- செட்டிக்குளம், திண்டுக்கல் மாவட்டம்- கொடைக்கானல், விருதுநகர் மாவட்டம் -சிவகாசி, மதுரை மாவட்டம்- உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 30 மி.மீட்டர் மழை பதிவாகியது.
பலத்த மழைக்கு வாய்ப்பு: புதுச்சேரி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சனிக்கிழமை (செப்.26) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment