பேராவூரணி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உரப்பயிர், நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி அலுவலர் ஈஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: பேராவூரணி வட்டாரத்தில் நெல்லுக்கு அடுத்தப்படியாக தென்னை பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. நிலத்தின் வளத்தை மேம்படுத்த அதிகளவு இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு பேராவூரணி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உரப்பயிர்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேராவூரணி வட்டார விவசாயிகள் தாங்கள் விரும்பும் உரக்கடைகளில் தேவையான பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, கொளுஞ்சியை வாங்கி கொண்டு ரசீதுடன் வேளாண் உதவி அலுவலர்கள் மூலம் வேளாண்மை உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ஒரு எக்ேடருக்கு 50 கிலோ அனுமதிக்கப்படும். 50 கிலோவுக்கான விலையில் 50 சதவீத தொகை அல்லது அதிகபட்சமாக எக்ேடருக்கு ரூ.2000 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். இத்தொகை சம்மந்தப்பட்ட விவசாயி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விண்ணப்பத்துடன் போட்டோ, சிட்டா அடங்கல், ரொக்க ரசீது வழங்க வேண்டும். மேலும் கரும்பில் இரும்பு சல்பேட் இடும் விவசாயிக்கு எக்ேடருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது. இதற்கும் தனியார் உரக்கடைகளில் வாங்கி இருந்தாலும் ரசீதுடன் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிகளவில் பசுந்தாள் உரப்பயிர்களை தென்னந்தோப்பு மற்றும் அறுவடையான நெல் வயல்களில் விதைத்து நிலத்தை வளப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinakaran

No comments:
Post a Comment