கோத்தகிரி அருகிலுள்ள காவிலோரை பகுதியில் தேயிலை தொழிற்சாலையை திறந்து வைத்து பேசிய தேயிலை செயல்வாரிய இயக்குனர் பால்ராஜ் தெரிவிக்கையில்: தேயிலை தொழிற்சாலை அமைக்க கடந்த காலங்களில் கொல்கத்தா சென்று வரை வேண்டியிருந்தது. ஆனால் தற்போது தேயிலை விவசாயிகளின் வசதிக்காக குன்னூரிலேயே அனுமதி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் தேயிலை விவசாயிகள் தரமான தேயிலையை தொழிற்சாலைக்கு கொடுத்து உயர்வான விலையை பெற வேண்டும். தரமற்ற இலைகளை தேயிலை தொழிற்சாலைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். விவசாயிகளின் நன்மை கருதி சிறிய தேயிலை தொழிற்சாலை அமைப்பவர்களுக்கு 40 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. இதுவரை தேயிலை தொழிற்சாலைகள் தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ. 13 வழங்கி வந்தது. தரமான தேயிலையை வழங்கும் விவசாயிகளுக்கு பிப்ரவரி மாதம் முதல் கிலோ ஒன்றுக்கு ரூ.16 விலை நிர்யணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment