நாகை வெளிப்பாளையம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மாவட்ட ஆத்மா திட்டத்தின்கீழ், இன்று (29ம் தேதி) காலை 9 மணி அளவில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. கறவை மாடு வளர்ப்பின் இன்றைய நிலை, தரமான கறவை மாடுகளை தேர்வு செய்தல், கொட்டகை அமைக்கும் முறை, கறவை மாடு வளர்ப்பிற்கான சமச்சீர் தீவன மேலாண்மை, கறவை மாடு கன்று, கிடேரி பராமரிப்பு, கறவை மாடுகளில் கருவூட்டல் மற்றும் சினைப்பருவ மேலாண்மை, கறவை மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், தடுப்பு முறைகள்போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும். முதலில் வரும் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இத்தகவலை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment