நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு எதிர்பாராத வகையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய பரவலான மழை பெய்தது. கனமழை பெய்யாவிட்டாலும் பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் குறைவாக இருந்ததால் தேயிலை செடிகளில் கொப்பள நோய் ஏற்பட்டு மகசூல் வெகுவாக குறைந்தது. இதனை தொடர்ந்து கடந்த 1 வாரமாக குன்னூர், கோத்தகிரி, கொலக்கம்பை, அருவங்காடு, சேலாஸ் உள்ளிட்ட பகுதியில் நீர்மற்றும் உறைபனியின் தாக்கம் அதிகரித்தது. இதனால் சுமார் 500 ஏக்கர் பரபரப்பளவிலான தேயிலை செடிகள் கருகியதுடன் மழைத்தோட்ட காய்கறி பயிர்களும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் விவசாயிகள் பெரும்பாதிப்படைந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை நீடித்து வருவதால் உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. பனிக்காலத்தில் மழைச்சாரல் நீடிப்பதால் கடும் குளிரும் நிலவி வருகிறது.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment