Wednesday, January 27, 2016

மக்காச்சோள பயிரில் தண்டுதுளைப்பான் நோய் தடுக்க வேளாண்துறை அறிவுரை

 மக்காச்சோள பயிரில் ஏற்படும் தண்டு துளைப்பான் நோயை தடுப்பது குறித்து பழநி வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.பழநி பகுதியில் சுமார் 11 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. இப்பயிர்கள் வளர்ச்சி நிலையை அடையும் போது தண்டு துளைப்பான் நோய் ஏற்படும். இதனை தவிர்க்க என்டோசல்பான் மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி எனும் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு பின் மீண்டும் இதேபோல் அமைக்க வேண்டும்.

மேலும் இக்காலங்களில் ஏற்படும் அடிச்சாம்பல் நோயை தவிர்க்க 1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம் மெட்டலாக்சின் மற்றும் 2.5 கிராம் மேன்போசெட்ஸ் மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாமென பழநி வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment