ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞாமுள் ளோர் வேடம், இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவார்- நக்கன் போல்
ஞான முளவேடம் நண்ணிநிற்பாரே
பெயரை கேட்டதும் ஆடு இந்த செடியை உணவுக்காக கடிக்காது என்பதும் அதனாலயே இந்த பெயர் ஏற்பட்டதும் விளங்கும். தரையில் படர்ந்து வளரும் செடியின் இலைகளின் மேல் வெள்ளை பூச்சுடன் காணப்படும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விளையக்கூடியது. ஆடுதீண்டாப்பாளை, ஆடுதொடப்பாளை பங்கம்பாளை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும்.
ஆடுதீண்டாப்பாளையை முறையாக பயன்படுத்தினால் குடற்புழு, சிலந்தி பூச்சிகடிகளின் நஞ்சுகள், கரும்படை, கரப்பான் 80 வகை வாதநோய்கள் குணமாகும். சில பெண்களுக்கு பத்து மாதம் ஆகியும் குழந்தை பிறப்பின் வலி எடுக்காமல் கடும் வேதனையுடன் முறையற்ற வலி உண்டாகும். வேதனையில் துடிக்கும் நிலை உண்டாகும். அவர்களுக்கு இதன் வேரை சூரணமாக்கி அதில் பத்து கிராம் அளவில் வெந்நீரில் கொடுக்க வேதனை தீரும் வகையில் குழந்தை பிறப்பு உண்டாகும்.
எந்த பாம்பு கடித்தது என்று தெரியாமல் பாம்பு கடி ஏற்பட்டால் இதன் வேரை அரைத்து காலை வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் தொடர்ந்து கொடுத்தால் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எல்லாவிதமான பாம்பு கடிகளும் நீங்கும். மருந்து சாப்பிடும் காலத்தில் 24மணிநேரம் தூங்காமல் இருந்து புதுப்பாளையில் உப்பில்லாத பச்சரிசியை பொங்கி சாப்பிட வேண்டும். பெண்கள் வயிற்றில் உள்ள கருப்பை கோளாறு காரணமாக குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படும்.
பெண்கள் ஆடுதீண்டாப்பாளையின் விதைகளை சூரணம் செய்து ஐந்து கிராம் எடுத்து கையளவு சிற்றாமணக்கெண்ணெயில் கொடுக்க பேதியாகும். மாதம் ஒரு முறை என மூன்று மாதம் கொடுக்க அதன் பிறகு கரு ஏற்படும். பெண்களின் வயது உடல் தன்மை அறிந்து கொடுக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனை முறையற்ற மாதவிடாய். இதனால் மனஉளைச்சலும் சில பெண்களுக்கு ஏற்படும்.
இவர்கள் ஆடுதீண்டாப்பாளையின் இலைச்சாற்றை காலை மாலை பத்து மிலி அளவில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாளடைவில் மாதவிடாய் ஒழுங்காகும். விதைச்சூரணம் ஐந்து கிராம் விளக்கெண்ணெயில் சாப்பிட மலத்தில் கலந்துள்ள கிருமிகள் பேதியாகி நீங்கும். முறைக்காய்ச்சல் தணியும். ஆடுதீண்டாப்பாளையின் முழுச்செடியின் சாற்றில் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து பக்குவமாய் காய்ச்சி எடுத்து வடிகட்டி கொள்ளவேண்டும்.
அதை உடலில் ஏற்படும் கரும்படையில் பூச அவை நீங்கி குணம் ஏற்படும். பாம்பு கடித்து விட்டால் இலைச்சூரணத்தை இரண்டு கிராம் அளவில் கொடுக்க விஷம் நீங்கும். இந்த சூரணத்தை கொடுத்து வந்தால் யானை தோல் சொறி என்ற தோல் நோய் நீங்கும். சிலருக்கு முகம் கை கால்களில் கருமை படர்ந்து இருக்கும். இதை கருங்குட்டம் என்பார்கள் இவர்கள் காலை வேளையில் இலைச்சூரணத்தை இரண்டு கிராம் அளவில் வெந்நீரில் கலந்து குடிக்க கருங்குட்டம் குணமாகும்.
கிரந்திகரப் பன் வெக்கை கேசருவி மாந்தை
யரந்தை விளையை யறுக்கும் துறந்து
பிரியொணா நோய்களையும் பின்முன்பா ராமல்
மறியுணா மூலியடை வாய்
ஆடுதொடப்பாளைக் சுகக்கிருமி வன் சிலந்தி
நீடுகளுங் குட்டம் நிறை கரைப்பான் ஆடிடச்செய்
என்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்
திண்பெறுதற் றாது வுமாரு செய்ய
என்கிறார் அகத்தியர் பெருமான். ஆடே தீண்டாத செடி என்றாலும் அதை ஆராய்ந்து அதன் தனித்தன்மையும் அறிந்து நாம் நலமாக வாழ்வதற்கு வகுத்த முறைகளை பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.
Source : Dinakaran
No comments:
Post a Comment