Sunday, January 31, 2016

உழவர்சந்தையில் கடந்த மாதம் ரூ.1¼ கோடிக்கு காய்கறிகள் விற்பனை



பொள்ளாச்சி,
பொள்ளாச்சி உழவர்சந்தையில் கடந்த ஜனவரி மாதம் ரூ.1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 635–க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகி உள்ளன.
உழவர்சந்தைபொள்ளாச்சியில் உழவர்சந்தை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 80 கடைகள் உள்ளன. சந்தைக்கு பொள்ளாச்சியை சுற்றி உள்ள கிராமங்கள் மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு, பெதப்பம்பட்டி, சுல்தான்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள், பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
விவசாயிகள் சரக்கு வாகனங்களிலும், அரசு பஸ்களிலும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். மேலும் இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 105 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.1 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 635–க்கு விற்பனை செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 481 விவசாயிகள் தங்களது விளைபொருட்களை உழவர்சந்தை மூலம் விற்பனை செய்துள்ளனர். இவற்றை 95 ஆயிரத்து 324 பேர் வாங்கி சென்றுள்ளனர்.
விற்பனை குறைவுகடந்த டிசம்பர் மாதம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 51 ஆயிரத்து 430–க்கு விற்பனையானது. இதை ஒப்பிட்டு பார்க்கும் போது ஜனவரி மாதம் ரூ.5¾ லட்சத்துக்கு விற்பனை குறைந்துள்ளது. இது குறித்து உழவர்சந்தை அதிகாரிகள் கூறியதாவது:–
கடந்த டிசம்பர் மாதத்தை காட்டிலும், ஜனவரி மாதம் உழவர் சந்தைக்கு காய்கறிகள், பழங்கள் வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் விலை குறைவாக இருந்ததால் விற்பனை தொகை குறைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment