Wednesday, January 27, 2016

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்திற்கு...பரிந்துரை சேகரிப்பு: சொர்ணவாரி பட்டத்தில் மானியத்திற்கு வாய்ப்பு


தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேவையான, மானிய திட்டங்களின் பரிந்துரைகளை, வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், வேளாண் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். சொர்ணவாரி பட்டத்திற்குள், பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் துறையில், மத்திய அரசு திட்டங்களில் ஒன்றான, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு, புதிய கட்டடங்கள்; வேளாண் துணை கிடங்குகள்; ஊராட்சிகளில் நெற்களங்கள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

மேலும், நெற்பயிர் இயந்திர நடவு; விதைகள் உற்பத்தி; எண்ணெய் வித்து பயிர்; வேளாண் பொறியியல் இயந்திரம்; வேளாண் மற்றும் தோட்டக்கலை சொட்டு நீர் பாசனம்; விதைகள் உள்ளிட்டவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது.

இயந்திரம்:இந்நிலையில், மத்திய அரசு இந்த மானிய திட்டம், முதல் ஐந்தாண்டுகள் திட்டம், 20-15ம் ஆண்டு இறுதியுடன் முடிந்தது. இதனால், விதை, உரம், வேளாண் பொறியியல் இயந்திரம் ஆகியவற்றிற்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சமீபத்தில் பெய்த வட கிழக்கு பருவ மழையால், ஏரிகள் நிரம்பியும்; ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்தும் உள்ளன.

விவரங்கள்:இதனால், நீரின்றி விவசாயம் செய்யாமல் இருந்த நிலங்களில், விவசாய பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. இந்நிலையில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்ட மானியங்கள் நிறுத்தப்படுவதால், வேளாண் துறை நிர்வாகம் சிக்கலுக்கு ஆளாக நேரிடும் என்பதால், மானிய திட்டத்தை மீண்டும் துவக்க, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, மாவட்ட வேளாண் நிர்வாகம், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு நேரடியாக சென்று, மானிய திட்டங்களின் தேவை விவரங்களை சேகரித்து வருகிறது.இதன் மூலம் சொர்ணவாரி பட்டத்திற்கு, மானியம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வகுக்கப்படும் திட்டம் தான், வேளாண் அபிவிருத்தி திட்டம். திட்டத்தின் முதல் ஐந்து ஆண்டுகள் திட்டம் நிறைவடைந்து உள்ளது.இரண்டாம் ஐந்து ஆண்டுகள் திட்டத்திற்காக, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களின் பரிந்துரைகளை சேகரித்து வருகிறோம். அவற்றை, மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். சொர்ணவாரி பட்டத்திற்குள் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் கிடைத்தால், சொர்ணவாரி பட்டத்தில், பல்வேறு திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment