திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் செய்ய 433 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் வட்டத்தில் 29, நன்னிலம் வட்டத்தில் 46, குடவாசல் வட்டத்தில் 80, வலங்கைமான் வட்டத்தில் 56, மன்னார்குடி வட்டத்தில் 112, நீடாமங்கலம் வட்டத்தில் 54, திருத்துறைப்பூண்டி வட்டத்தில் 56 என மொத்தம் 433 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் நலன் கருதி நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை தளர்வு செய்து அதற்கான பிடித்தம் செய்து கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் விற்பனை செய்யும் நெல்லுக்கான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் சிரமங்கள் குறித்து புகார் தெரிவிக்க திருவாரூர் துணை மேலாளர் 9942381285, மன்னார்குடி துணை மேலாளர் 9626010902, மேலாளர் (தரக்கட்டுப்பாடு) 9443336200, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் 9442255542 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Source : Dinamani
No comments:
Post a Comment