தோட்டக்கலைத் துறையின் நிதியுதவியுடன் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்த எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி: தோட்டக்கலைத் துறையின் மூலம் தருமபுரி மாவட்டத்தின் 8 வட்டாரங்களிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகள் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்த, கடந்த 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.4.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது வயல்களில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசன அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன், சிட்டா, அடங்கல், எப்.எம்.பி. வரைபடம், சிறு மற்றும் குறு விவசாயி சான்று, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், பயனாளியின் வண்ணப் புகைப்படம்-3 ஆகியவற்றை இணைத்து, அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment