கரூர் மாவட்டத்தில் வேளாண்மையை மேம்படுத்தும் திட்டமாக மண்மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்கு மண் மாதிரியை பரிசோதித்து விபரம் தெரிவித்தால் அதன்படி மண்ணுக்கேற்ற சாகுபடி பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இதற்காக மண்மாதிரி ஆய்வு திட்டம் உருவாக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 40ஆயிரம் விவசாய நிலங்களில் மாதிரி எடுத்து ஆய்வு செய்து ஒருங்கிணைந்த கையேடு வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.40 லட்சம் செலவில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வுக்கூடம் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த நடமாடும் ஆய்வகத்தில் 5 விதமான உபகரணங்கள் உள்ளன. மண்ணில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களான துத்தாகம், இரும்பு, தாமிரம் மாங்கனீஷ் சத்துக்களை கண்டறிதல். மண்ணின் சுண்ணாம்புநிலை, தழைச்சத்து, கண்டறியும் வசதியும் உள்ளது. ஆய்வக ஊர்தியை கிராமங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விவசாயிகள் மண்மாதிரிகளை ஆய்வு செய்து உடனடியாக மாதிரி அறிக்கைகளை அளிப்பது கரூர் மாவட்டத்தில உள்ள அனைத்து வட்டாரத்திற்கும் சென்று விவசாயிகளிடம் மண்மாதிரி பெற்று பரிசோதனை முடிவுகளைஉடனடியாக அறிவிக்கும் நோக்கில் துவக்கப்பட்ட திட்டம் மந்த கதியில்உள்ளது.சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் நிலத்தில் மண்மாதிரி எடுக்கப்பட்டது. ஆனால் ஆய்வு முடிவுகள் இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. ஆய்வு முடிவுகள் அடங்கிய அட்டையை பயனாளிகளுக்கு விரைவில் வேளாண்துறை வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண்துறையினர் கூறுகையில், விரைவில் பரிசோதனை முடிவுகளை தெரிவிக்கும் வகையில் அட்டை வழங்கப்படும் என்றனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment