Friday, January 22, 2016

ஒருங்கிணைந்த விவசாய முறை மூலம் கூடுதல் வருவாய்


ஒருங்கிணைந்த விவசாய முறை மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும்' என, தெரிவிக்கப்பட்டது.
'எனது கிராமம், எனது பெருமை' திட்டத்தின் கீழ், இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு நிறுவனத்தின் ஊட்டி மையம் சார்பில், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கத்துடன் இணைந்து, கடசோலை கிராமத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது. மத்திய மண், நீர் வள பாதுகாப்பு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சுந்தராம்பாள் வரவேற்றார். நீலகிரி ஆதிவாசி நலச்சங்க செயலர் ஆல்வாஸ், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,“பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக உபாசி, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார்.
அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் பேசுகையில்,“ஒருங்கிணைந்த பண்ணை முறையை கையாண்டு, விவசாயம் மட்டுமல்லாமல், ஆடு, மாடு வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட வேண்டும்; அதன் மூலம் கூடுதல் வருவாய் பெற முடியும்,” என்றார்.
அமைப்பின் ஆலோசகர் ராஜ்குமார் பேசுகையில், “விவசாயிகள், குழுக்களாக செயல்படுவதன் மூலம், அவர்களது தேவைகளை, எளிதாக பூர்த்தி செய்து கொள்ள முடியும். வளர்ச்சி திட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட வசதிகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்,” என்றார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment