சிங்கம்புணரி வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் மை உற்பத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.
இறவை பாசனத்தில் 200 ஏக்கர் டி.எம்.வி.10 .வி.ஆர்.ஐ.2, 6.ரக நிலக்கடலை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் ஏக்கருக்கு 400 கிலோ சிப்சம் கடையில் வாங்கி பில்லை வேளாண்மை வளர்ச்சி மையத்தில் கொடுத்தால் 50 சதவீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.தேசிய எண்ணெய் வித்துஉற்பத்தி திட்டத்தில் களைக்கொல்லி மருத்துக்கு ஏக்கருக்கு ரூ 200 மானியம் உண்டு.சிறு தானிய உற்பத்தி திட்டத்தின் கீழ் கம்பு, சோளம், ராகி, தினை, சாமை பயிர்களுக்கு ஏக்கர் 1க்கு 12.5. கிலோ நுண்நூட்டம் வேளாண்மை வளர்ச்சி மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.விவசாயிகள் சிங்கம்புணரி வேளாண்மை வளர்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு உதவி இயக்குனர் கார்த்தி கேயன் தெரிவித்தார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment