சுவர்ணப்பட்டி மரம் சாலை ஓரங்களில் வளரக் கூடியது. அழகுக்காக வைக்க கூடிய இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இது, சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. பூக்கள், இலைகள், வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகிறது. கொத்துக்கொத்தான பூக்களை கொண்ட மரம்.சுவர்ணப்பட்டி மரத்தின் வேரை பயன்படுத்தி பால்வினை நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வேர் பொடியுடன், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்கவும். இதில் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்தால் வயிற்று பூச்சிகள் வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பால்வினை நோயினால் ஏற்படும் கொப்பளங்கள், புண்களுக்கு மருந்தாகிறது. தோல்நோய்களை குணப்படுத்துகிறது. புற்றுநோயை போக்கும் தன்மை கொண்ட சுவர்ணப்பட்டி, தங்க அரளி என்றும் அழைக்கப்படுகிறது. விஷத்தன்மையை முறிக்கும் மருந்தாக விளங்கும் இது மஞ்சள் நிற பூக்களை அதிகளவில் உடையது. இந்த மரம் கோயில்களில் வளர்க்கப்படுகிறது. சுவர்ணப்பட்டி மரத்தின் வேர் பொடியை பயன்படுத்தி விஷக்கடிக்கான மருந்து தயாரிக்கலாம்.
வேர் பொடியுடன் சிறிது எலுமிச்சை சாறு விட்டு நன்றாக கலக்கவும். இதை பாம்பு, தேள், எலி கடித்த இடத்தில் போடும்போது விஷத்தன்மை முறியும். புதர்போல் வளரக்கூடிய சுவர்ணப்பட்டியானது வெறிநாய் கடி விஷத்தைகூட முறிக்கும் தன்மை கொண்டது. மேல்பூச்சாக மட்டுமின்றி இதை சிறிது சாப்பிட பயன்தருவதாக அமைகிறது. சுவர்ணப்பட்டி மலர்களை பயன்படுத்தி வயிற்று வலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு வேளைக்கு 5 பூக்கள் எடுக்கவும்.
இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்தால் வயிற்று வலி, கடுப்பு போக்கும். வயிற்று புண்களை ஆற்றக்கூடியது. புற்றுநோய் புண்களை ஆற்றும். கல்லீரலை பலப்படுத்தும். வயிற்று பூச்சிகளை அழிக்கும். சுவர்ணப்பட்டி பூக்கள், இலைகளை பயன்படுத்தி படை, தேமலுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேங்காய் எண்ணெயுடன், பூ பசை, இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி எடுத்து பயன்படுத்தினால் தோல்நோய்களான படை, தேமல், சொரி போன்றவை குணமாகும். வண்டு கடிக்கு மருந்தாகிறது. சுவர்ணப்பட்டியின் இலையில் மருத்துவ குணங்கள் அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். இது வீரியம் உடையது என்பதால் அளவாக பயன்படுத்த வேண்டும்.
Source : Dinakaran
No comments:
Post a Comment