வாலாஜாபாத்:'அட்மா' திட்டம் சார்பில், நெல் மற்றும் வேர்க்கடலை ஆகிய பயிர்களில், தாக்கும் நோய் பூச்சிகளை கட்டுப்படுத்தும், தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.வாலாஜாபாத் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், நேற்று, காலை 11:00 மணி அளவில் நடந்த, நெல் மற்றும் வேர்க்கடலை ஆகிய பயிர்களில் தாக்கும் நோய்களை பூச்சி மருந்தினால், கட்டுப்
படுத்தும் தொழில்நுட்ப முகாமிற்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜி.லதா பானுமதி தலைமை தாங்கினார். மண் பரிசோதனை வேளாண் அலுவலர் பா.காளிஅம்மாள், 'அட்மா' தொழில்நுட்ப மேலாளர் எஸ்.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண் உதவி அலுவலர் எஸ்.பரமன் இலை சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் ஆகிய நோய்களை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் குறித்து, விவசாயிகளிடையே விளக்கி பேசினார். பயிற்சி முகாமில், வாலாஜாபாத் வட்டாரத்தைச் சேர்ந்த, 40 விவசாயிகள் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment