Wednesday, January 27, 2016

கொய்யா இலை இருக்க கவலை ஏன்?


கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும். மேலும் கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.
கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம்.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.
கொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.

Source : Dinamani

No comments:

Post a Comment