Wednesday, January 27, 2016

சின்ன சின்ன செய்திகள் : தினை வெண்பொங்கல்




தினை வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்: தினையரிசி - 1கப், பாசிப்பருப்பு - 1/4 கப், இஞ்சி - சிறிய துண்டு, மிளகு - 1/2 தேக்கரண்டி, பெருங்காயம் - சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கேற்ப, கடுகு - 1/4 தேக்கரண்டி, உளுந்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி, வறுத்த முந்திரி -10, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் சுத்தம் செய்த தினையரிசி, பாசிப்பருப்பு, உப்பு, தேவையான நீர் சேர்த்து வேக விடவும். பிரஷர் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அணைக்கவும். வாணலியில் நெய் சூடாக்கி, முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உ.பருப்பு, மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும்.
தகவல்: கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், சென்னை-41.

மூலிகைப் பயிர்கள்
: மூலிகைப் பயிர்களில் ஆய்வுகளை மேற்கொள்ள த.வே.பல்கலைக்கழகம், மூலிகை நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது. மருந்து கூர்க்கன் ஆராய்ச்சி "சமிலேப்ஸ்' பெங்களூரு; செங்காந்தள் மலர் மருந்து பயிர் ஆராய்ச்சிக்கு 
ஆல் கெம் இன்டர்நேஷனல், புதுடில்லி ஆகிய நிறுவனங்களோடு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. விவசாயிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தேவையான பயிர் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கோவை ஆரிய வைத்திய பார்மசியோடு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருப்பதால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் திப்பிலி, அமுக்கிரான் கிழங்கு, நிலவேம்பு, ஆடதோடா போன்ற அரிய மூலிகைப்பயிர்களை தமிழ்நாடு விவசாயிகள் வணிக ரீதியாக சாகுபடி செய்யும் வாய்ப்பை பெறுவீர். இந்த அரிய மூலிகைப்பயிர்களை சாகுபடி செய்யும். 
விவசாயிகள் ஆர்ய வைத்திய பார்மசியுடன் நேரடி ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்த நிறுவனத்திற்கு நேரடியாக விளைவித்த பொருட்களை வழங்கி பயன்பெறலாம்.
தகவல்: முனைவர் கு.ரா.ஆனந்தகுமார், துணைவேந்தர் (பொறுப்பு), த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.

கரும்பு சாகுபடி: ஒரு பருதுண்டு தொழில்நுட்பம் இம்முறையில் நாற்றங்கால் அல்லது தொழுஉரம் மண் கலவை நிரப்பப்பட்ட குழித்தட்டு மற்றும் பாலிதீன் பைகளில் விதைக்கப்பட்டு நாற்றங்காலில் ஒரு பரு நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன. இம்முறையில் ஒரு எக்டருக்கு 1 முதல் 1.5 டன் ஒரு பரு விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு பரு துண்டு வெட்டி எடுத்து போக மீதமுள்ள கரும்பினை வெல்லம் தயாரிப்பதற்கோ அல்லது சர்க்கரை ஆலை பயன்பாட்டிற்கோ பயன்படுத்தலாம்.
வழக்கமான முறையை ஒப்பிடும் போது 80-90 சதவீதம் கரணை மீதப்படுத்தப்படுவதுடன், அதிக எடையுள்ள விதை கரணைகள் கையாள்வதில் ஏற்படும் சிரமமும் தவிர்க்கப்படுகிறது. நல்ல ஆரோக்கியமான பருக்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு நோய் பாதிக்கப்பட்ட அல்லது சேதாரமடைந்த பருக்களை எளிதில் நீக்கி விடலாம். இம்முறையில் ஆட்செலவு பெருமளவில் குறைகிறது. ஒரு பரு துண்டுகள் வெட்டுவதற்கு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கால் மிதியால் இயக்கப்படும் ஒரு பரு துண்டு வெட்டும் கருவி,காற்றழுத்தத்தால் இயக்கப்படும் ஒரு பரு துண்டு வெட்டும் கருவி, மின் மோட்டாரால் இயக்கப்படும் ஒரு பரு துண்டு வெட்டும் கருவி, குழித்தட்டுகளில் ஒரு பரு துண்டுகளை இடும் கருவி, டிராக்டரால் இயங்கும் இரண்டு வரிசையில் ஒரு பரு துண்டுகளைக் கொண்டு வளர்க்கப்பட்ட கரும்பு நாற்றுகளை நடும் கருவி.
மேலும் விவரங்களுக்கு: முனைவர் செ.ஜேக்கப் அண்ணாமலை, மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவனம் பிராந்திய மையம், கோயம்புத்தூர்-641 007.

Source : Dinamalar

No comments:

Post a Comment