தேவகோட்டை அருகே சித்தனூர், கண்ணங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் டீலக்ஸ் பொன்னி பயிரிடப்பட்டது. இதனால் எதிர்ப்புத்திறன் குறைந்து அதிக அளவில் நோய் தாக்குதல் ஏற்பட்டது. குறிப்பாக நெற்பயிரில் குலைநோய், பாக்டீரியா இலைக்கருகல்நோய் மற்றும் இலைசுருட்டுப்புழுவின் தாக்குதல்கள் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து வட்டார வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பயிற்சியளிக்கப்பட்டது. பேராசிரியர்கள் சதீஸ்குமார், அழகப்பன் விவசாயிகளுக்கு பயிற்சி முறை குறித்து விளக்கமளித்தனர்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment