கோழிகளுக்கான தீவனத்தில் தொடர்ந்து குளிர்காலத்துக்கான ஊட்டச்சத்துக்களையே அளித்து வர வேண்டும் வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்தி: அடுத்த நான்கு நாள்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பு குறைவு. இரவு வெப்ப அளவுகள் குளிர்காலத்தில் இயல்பாக நிலவும் குறைந்த அளவுகளிலிருந்து உயர்ந்து காணப்படும். இதனால், இக்குளிர்காலம் சற்றே வெதுவெதுப்பாக மாறியுள்ளது. இதனால்,
கோழிகளில் தீவன எடுப்பு ஒரு நாளைக்கு 110 கிராம் என்ற இயல்பான அளவில் இருக்கும்.
பகல் வெப்பம் இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை. இதனால், மேலும் ஒருவாரத்துக்கு இந்நிலையே நீடிக்கும். எனவே, கோழிகளுக்கான தீவனத்தில் தொடர்ந்து குளிர்காலத்துக்கான ஊட்டச்சத்துக்களையே அளித்து வர வேண்டும்.
கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் ஈகோலை கிருமியின்
தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது,
எனவே, பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனம் மற்றும் தண்ணீரில் இந்தக் கிருமிகளின் தாக்கம் உள்ளதா என இந்த ஆய்வகத்தில் பரிசோதனை செய்து. அதற்கேற்றார்போல் தீவன
மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
Source : Dinamani
No comments:
Post a Comment