Friday, January 22, 2016

தஞ்சையில் இருந்து சரக்கு ரெயிலில் அரவைக்காக 2,000 டன் நெல் சிவகங்கை, திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டது



தஞ்சையில் இருந்து சரக்கு ரெயிலில் அரவைக்காக 2,000 டன் நெல் சிவகங்கை, திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தஞ்சையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான சேமிப்புக்கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுவதோடு, தமிழகத்தில் திருவள்ளூர், மதுரை, சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படும். இந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்களிலும், லாரிகள் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும்.

2,000 டன் நெல்

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டு பிள்ளையார்பட்டி, பருத்தியப்பர்கோவில் ஆகிய இடங்களில் உள்ள சேமிப்புக்கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த நெல்மூட்டைகள், லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. இதே போல் கொள்முதல் நிலையங்களில் இருந்தும் லாரிகளில் நெல்மூட்டைகள் ஏற்றி வரப்பட்டன. இவ்வாறு ஏற்றிவரப்பட்ட நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 21 பெட்டிகளில் 1000 டன் சிவகங்கைக்கும், 21 பெட்டிகளில் 1000 டன் திருநெல்வேலிக்கும் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

Source : Dailythanthi

No comments:

Post a Comment