Friday, January 29, 2016

மிளகாய்,வாழைக்கு இன்சூரன்ஸ்:வேளாண் காப்பீட்டு நிறுவனம் தகவல்


சிவகங்கை மாவட்டத்தில் 2015-16ம் ஆண்டு ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள மிளகாய், வாழை பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரிமியதொகை செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் மிளகாய் பயிர் 10 ஆயிரம் ஏக்கரிலும், வாழை 1250 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிர் அதிகம் பயிரிடப்படும் வட்டாரங்களான சிவகங்கை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிங்கம்புணரி, எஸ்.புதூர், மற்றும் திருப்புவனம் வட்டாரங்களில் பயிர் வாரியாக தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மிளகாய்: இளையான்குடி, காளையார்கோயில், எஸ்.புதூர், திருப்புவனம்.பிரிமிய தொகை: ஏக்கருக்கு இயல்பான காப்பீட்டு தொகை ரூ.5931.காப்பீட்டு திட்டத்தில் சேர கடன் பெறும் விவசாயிகள் ரூ.326, கடன் பெறாத விவசாயிகள் ரூ. 294 செலுத்த வேண்டும்.வாழை: ஒக்கூர் பிர்க்கா, பெரியகோட்டை, சிவகங்கை, தமறாக்கி. அ.திருஉடையார்புரம் பிர்க்கா,புளியால், மானாமதுரை,முத்தனேந்தல், செய்களத்தூர் பிர்க்கா, சாக்கோட்டை பிர்க்கா.சிங்கம்புணரி பிர்க்கா, கொந்தகை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் பிர்க்கா.

பிரிமிய தொகை: ஏக்கருக்கு இயல்பான காப்பீட்டு தொகை ரூ.2,68,549. காப்பீட்டு திட்டத்தில் சேர கடன் பெறும் விவசாயிகள் ரூ.7385, கடன் பெறாத விவசாயிகள் ரூ.6,647 பிரிமியம் செலுத்த வேண்டும்.காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பயிர் விதைத்த அல்லது நடவு செய்த ஒரு மாத காலத்திற்குள் கணக்கு வைத்திருக்கும் கூட்டுறவு வங்கி அல்லது தேசிய வங்கியில் பிரிமிய தொகையை செலுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment