தா.பேட்டை அடுத்த தேவானூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. ஊராட்சி துணை தலைவர் கனகராஜின் நிலக்கடலை சாகுபடி வயலில் உரமிடுதல், நீர்பாய்ச்சுதல், களைஎடுத்தல், ஜிப்சம் இடுதல், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் பயிற்சி குறித்து வட்டரா தொழில்நுட்ப மேலாளர் வரகுணபாண்டியன் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். தேவானூர், தேவானூர் புதூர், செவந்தாம்பட்டி மற்றும் பெருகனூர் கிராமங்களை சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை வேளாண்மை துணை அலுவலர்கள் பிரசாத், சதீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
Source : Dinakaran

No comments:
Post a Comment