Friday, August 14, 2015

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம்


உடுமலை அருகே சாமராயபட்டியில் தென்னை விவசாயிகளுக்கு வியாழக்கிழமை மானிய விலையில் உரம் வழங்கப்பட்டது.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் மாதிரி செயல் விளக்கப் பண்ணை திட்டத்தின் கீழ் சாமராயபட்டி, மலையாண்டிக்கவுண்டனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 விவசாயிகளுக்கு ரூ. 17 லட்சம் மதிப்புள்ள உரங்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
மடத்துக்குளம் எம்எல்ஏ சி.சண்முகவேலு, இந்த உரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.ஜெயமணி, செயலாளர் சி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment