நாமக்கல்:
"வரும், 18ம் தேதி, நாட்டுக்கோழி குஞ்சுகள் பராமரிப்பு முறைகள் குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 18ம் தேதி, நாட்டுக் கோழி குஞ்சுகள் பராமரிப்பு என்ற தலைப்பில், இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமில், நாட்டுக்கோழி ரகங்கள், குஞ்சு பொரிக்கும் முறை, குஞ்சு பொரிப்பான்களின் பயன்கள், வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள் குறித்த நடத்தப்படும். மேலும், இப்பயிற்சியில், நாட்டுக்கோழி குஞ்சுகளைத் தாக்கும் பல்வேறு நோய்கள், அறிகுறிகள் மற்றும் அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கப்படும். அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 04286 - 266345 என்ற தொலைபேசி எண்ணில், வரும், 17ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Source : Dinamalar
No comments:
Post a Comment