வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், கால்நடை மருத்துவர் நெல்சன் ஜெயக்குமார் தலைமையில், கால்நடை ஆய்வாளர் கருணாநிதி, பராமரிப்பு உதவியாளர்கள் சச்சிதானந்தம், ஞானப்பிரகாசம், கால்நடைதொடர்பு பணியாளர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில், 55 மாடுகள், 145 ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள், மாடுகளுக்கு மலடு நீக்கம் மற்றும் சினை ஊசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், நோயுற்ற ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகளை, மருத்துவர்கள் வழங்கினர்.
Source : Dinamalar

No comments:
Post a Comment