Wednesday, August 12, 2015

திருந்திய நெல் சாகுபடிக்கு ரூ.6,000 மானியம்


திருவள்ளூர்:
திருந்திய நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, 4.94 ஏக்கர், 6,000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என, வேளாண் உதவி இயக்குனர் எபினேசன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:திருவள்ளூர் ஒன்றியத்தில், 9,880 ஏக்கர் பரப்பளவில், சம்பா நெல் சாகுபடி செய்யப்பட உள்ளது. சம்பா பட்டத்தில், விவசாயிகள் அதிக மகசூல் பெற, திருந்திய நெல் சாகுபடி முறையை கடைப்பிடிக்க, வேளாண் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதில், திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, அதிகபட்சம், 4.94 ஏக்கருக்கு, 6,000 ரூபாய் மானியம் அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நடவு செய்த, 15 நாட்களுக்குள், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியம் தொகை செலுத்தப்படும்.இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், ஈக்காடு உதவி வேளாண் அலுவலர் அலுவலகம் மற்றும் கிளாம்பாக்கத்தில் உள்ள, திட்ட முன்பதிவு முன்னுரிமை பதிவேட்டில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment