Monday, August 17, 2015

ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் காடை வளர்ப்பு இலவச பயிற்சி



பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் புதன்கிழமை (ஆக. 19) காடை வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் காடைக் குஞ்சு பராமரிப்பு, கறிக் காடை வளர்ப்பு, முட்டைக் காடை வளர்ப்பு, காடை வளர்ப்பின் பயன்கள் மற்றும் சந்தை வாய்ப்பு, தீவன மேலாண்மை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாறிவரும் பொருளாதார சூழலில் கறிக் காடைக்கான தேவை அதிகரித்து வருகிறது. காடைகளுக்கான தேவை அதிகமுள்ள இடங்களில் காடைப் பண்ணை அமைத்து லாபம் ஈட்டலாம். எனவே, இந்தப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள் 87541 14165 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றார் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ப. விஜயலட்சுமி.

Source: 

No comments:

Post a Comment