Monday, August 17, 2015

உள் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
 தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களைக் காட்டிலும் உள் மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது. 
 இந்த நிலையில், வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை மழையோ இடியுடன் மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Source: http://www.dinamani.com/tamilnadu/2015/08/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/article2979994.ece

No comments:

Post a Comment