Monday, August 1, 2016

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானியம்: நெல் சாகுபடியாளர்கள் முன் பதிவுக்கு அழைப்பு


தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், நெல் சாகுபடியாளர்களுக்கு பல்வேறு இனங்களில் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் முன் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

10 ரூபாய் மானியம்: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், சேந்தமங்கலம் வட்டாரத்தில், நெல் இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், நெல் சாகுபடியாளர்களுக்கு, பல்வேறு இனங்களில், தமிழக அரசு மானியங்கள் வழங்கி வருகிறது. பத்து ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்ட நெல் ரகங்களைக் கொண்டு விதை பண்ணை அமைத்து, வேளாண் துறைக்கு விதை நெல் வழங்கும் விவசாயிகளுக்கு, கிலோவுக்கு, எட்டு ரூபாய் என்ற அளவில், நடப்பு ஆண்டு மானியம் வழங்க அனுமதி பெறப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு உட்பட்ட நெல் ரகங்களைக் கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகள், விதை நெல் வாங்கும்போது, கிலோவுக்கு, 10 ரூபாய் மானியம் அனுமதித்து விதை நெல் வழங்கப்படுகிறது.

பழங்குடியினர்: நடவு இயந்திரம் மூலம், நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு (2.50 ஏக்கர் பரப்புக்கு), 5,000 ரூபாய் வீதம், இரண்டு ஹெக்டேர் வரை வழங்க திட்டம் பெறப்பட்டுள்ளது. நெல் நடவு இயந்திரம் மூலம் மேற்கொள்ள நாற்றுவிட உரிய டிரே, 50 சதவீதம் மானியத்தில், ஒரு தட்டிற்கு, அதிகப்படியாக, 40 ரூபாய் மானியம் வங்கப்படும். பவர் டில்லர், 8 ஹெச்.பி.,க்கு மேல் உள்ள இயந்திரம் வாங்கும் விவசாயிகளுக்கு (சிறு, குறு, ஆதிதிரவிடர், பழங்குடியினர்), 75 ஆயிரம் ரூபாய் அல்லது, 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, 40 சதவீதமும் அல்லது, 60 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கவும் அரசின் வழிமுறைகள் பெறப்பட்டுள்ளது.

இயந்திர நடவு: இது குறித்து உதவி வேளாண் இயக்குனர் தங்கராஜூ கூறியதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், நெல் சாகுபடியாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இத்திட்டத்தில் மானியங்கள் வழங்கப்படுகிறது. இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகள், நாற்று தயாரிக்க தேவைப்படும் தட்டு வேண்டுவோர் மற்றும் பவர் டில்லர் தேவைப்படும் விவசாயிகள், சேந்தமங்கலம் வட்டார வேளாண் விரிவாக மையத்தை தொடர்பு கொண்டு, முன் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment