Thursday, August 18, 2016

நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை


t

வேரழுகல் நோயானது 'மேக்ரோபோமினா பேசியோலினா' என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது. மண்ணில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது நோய் தாக்குதல் அதிகரிக்கும். நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும். நோய் தாக்கிய செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன.
இதனால் ஆங்காங்கே செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். நோய் தாக்குண்ட செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் சொட்டை சொட்டையாய் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமடைந்து பழுத்து உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: கோடையில் ஆழமாக உழுதல் வேண்டும். பயிர் சுழற்சி முறையை கடைப்படிக்க வேண்டும். தொழுஉரம் 12.5 டன் / எக்ேடர் இட வேண்டும். முந்தைய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும். முந்தைய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும். 
தரமான விதைகளை 'டிரைக்கோடெர்மா விரிடி' 4 கிராம் / கிலோ அல்லது 'சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்' 10 கிராம் / கிலோ அல்லது 'கார்பன்டசிம்' அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி அவசியம் செய்ய வேண்டும். விதைத்த 20 - 30 நாட்களுக்குள் 'சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்' / 'டிரைக்கோடேர்மா விரிடி' 2.5 / கிலோ / எக்டேர் என்ற அளவில் அதனுடன் 50 கிலோ தொழு உரம் கலந்து இட வேண்டும். வேரழுகல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் 'கார்பன்டசிம்' மருந்தை கலந்து நோய் தாக்கிய செடிக்கும் அதை சுற்றியுள்ள செடிகளுக்கும் வேர்ப்பகுதி நனையும்படி மருந்து கலவையை ஊற்ற வேண்டும்.
பேராசிரியர் ம.குணசேகரன்,
பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூ
ர்

Source : Dinamalar

No comments:

Post a Comment