Monday, August 22, 2016

ஏற்காட்டில் காபி விவசாயிகளுக்கு வாரியம் வேண்டுகோள்

சேர்வராயன் மலையில் காபி தோட்டங்களில் காய் துளைப்பானின் தாக்கம் காணப்படுகின்றது. காபி தோட்டங்களில் காபி பருப்பு முற்றாத நிலை ஏற்பட்டுள்ளதால், காய்களின் நுனிப் பகுதியில் காய் துளைப்பான் உள்ளே செல்வதற்கான சூழல் உள்ளது என்று காபி வாரியம் தெரிவித்துள்ளது.
 காபி விவசாயிகள் காபி வாரியம் பரிந்துரைத்த பூச்சி மருந்தை குளோரிபைரியாஸ் 20 ஈ.சி.600 மில்லி லிட்டரை 200 மில்லி லிட்டர் தண்ணீர் மற்றும் 200 மில்லி லிட்டர் ஒட்டும் திரவத்துடன் சேர்த்து முதுகில் சுமக்கும் தெளிப்பானைப் பயன்படுத்தி காய் கொத்துகளின் மீது படுமாறு தெளிக்க வேண்டும். மேலும், காபி காய்த் துளைப்பான் பாதித்த தோட்டங்களில் மட்டும் மருந்து தெளிக்க வேண்டும் எனவும் ஏற்காடு காபி வாரிய ஆராய்ச்சி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். 


Source : Dinamani

No comments:

Post a Comment