Monday, August 1, 2016

விவசாயிகள் செல்போன் மூலம் தங்களது விளை பொருட்களின் சந்தை நிலவரத்தை அறியலாம் கலெக்டர் தகவல் :

நாமக்கல் வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் முதன் முதலாக  ஆமணக்கு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  
இந்தியாவில்  பயறு வகை சாகுபடி குறைந்துள்ளதால், இந்த ஆண்டை சர்வதேச பயறுவகை ஆண்டாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பயறு வகைகள் மற்றும் எண்ணெய்  வித்துக்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை  மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்,  எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் வரப்பு பயிராக ஒரு விவசாயிக்கு 2 கிலோ  ஆமணக்கு விதை வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது இத்திட்டத்தின்  கீழ் விவசாயிகளுக்கு ஆமணக்கு விதை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து,  நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாயக்கிருஷ்ணன் கூறியதாவது:  நாமக்கல் வட்டார வேளாண் அலுவலகத்தின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சி  திட்டத்தில் ஒரு பகுதியாக, எண்ணெய் வித்து திட்டத்தின் கீழ் விதைப்பு  இயந்திரத்தின் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, மானிய  விலையில் உயிர் உரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலக்கடலையில்  ஊடுபயிராக விளைவிக்க பயறு வகை விவசாயிகளுக்கு ஆமணக்கு வழங்கும் திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2 கிலோ  ரூ. 306க்கு என 50சதவீத மானிய விலையில் ஆமணக்கு விதை வழங்கப்படுகிறது. இதையே வெளியில் விவசாயிகள் வாங்கினால் ரூ.606 செலவிட நேரிடும். எனவே, மானிய  விலையில் அரசு வழங்கும் ஆமணக்கு விதையை வரப்புப் பயிராக பயிரிட்டு,  விவசாயிகள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகத்தை  அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment