Monday, August 22, 2016

இயந்திரம் மூலம் நடவுப்பணி எக்டேருக்கு ரூ.5,000 மானியம்

நாகை மாவட்டத்தில் இயந்திரம் மூலம் நடவுப்பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுபற்றி நாகை கலெக்டர் பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டத்தில், நெல் மகசூலை அதிகரிக்க நெல் நடவை இயந்திரமயமாக்கல் மூலம் ஊக்கப்படுத்த, தேசிய வேளாண். வளர்ச்சி திட்டத்தில், நெல் மிஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

இத்திட்டத்தின்கீழ், 2016-17ம் ஆண்டுக்கு இயந்திரமயமாக்கல் மூலம் நெல் நடவு மேற்கொள்ள எக்ேடருக்கு ரூ.5 ஆயிரம் வீதம், 25 ஆயிரம் எக்ேடரில் மேற்கொள்ள இலக்கு பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து வேளாண்மை பொறியியல் துறை மூலமாகவோ, தொடக்க வேளாண். கூட்டுறவு வங்கி மூலமாகவோ அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ நடவு இயந்திரங்களை பயன்படுத்தி நடவு பணி செய்யலாம். 

இயந்திரம் மூலம் நடவு பணி மேற்கொள்ளும் விவசாயிகள் நடவுப்பணி செய்த பின் அதற்கான பட்டியல், புகைப்படங்கள், சிட்டா அடங்கல், விவசாயிகளின் ஒருங்கிணைந்த கையேட்டின் எண், தங்களுடைய வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை உதவி இயக்குனரையோ அணுகி விண்ணப்பத்தை சமர்ப்பித்து நெல் நடவு இயந்திரமயமாக்கலுக்கான பின்னேற்பு மானியம் ஹெக்ேடருக்கு ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 எக்ேடருக்கு மட்டும் மானியம் வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் மானியத் தொகையை விரைவாக பெற மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வங்கி கணக்கை தவிர்க்க வேண்டும். 

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நாற்றுகள் தயார் செய்து இயந்திரம் மூலம் நடவு பணி மேற்கொள்ள நாற்றங்கால் தட்டுகள் 50 சதவீத மானியத்தில் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இந்த நர்சரி தட்டுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர்களையோ அணுகி தங்களுக்கு தேவைப்படும் நாற்றங்கால் தட்டுகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளளர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment