Monday, August 22, 2016

காளான் வளர்ப்புக்குரூ.62,500 மானியம்

காளான் வளர்ப்புக்கு ரூ.62 ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படும், என தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ் வேந்தன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் காளான் வளர்ப்பிற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 2016-17ம் ஆண்டில் ஆர்வம் உள்ள தகுதியான 14 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படும். 
பயிற்சியாளர் ஒருவர் இவர்களுக்கென தனியாக நியமிக்கப்படுவார். அவர் விவசாயிகளின் பண்ணைகளுக்கே சென்று காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிப்பார். 
காளான் வளர்ப்பு திட்டத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.62 ஆயிரத்து 500 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்டத்திற்கு ரூ.12.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஆர்வம் உள்ள விவசாயிகள் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment