Monday, August 22, 2016

போச்சம்பள்ளியில்இயற்கை முறையில் 20 வகை கீரை சாகுபடிவேளாண் பட்டதாரி அசத்தல்

போச்சம்பள்ளியில் இயற்கை முறையில் 20 வகையான கீரைகளை சாகுபடி செய்து வேளாண் பட்டதாரி வாலிபர் அசத்தி வருகிறார்.
போச்சம்பள்ளி தாலுகா கோணனூரை சேர்ந்தவர் யுவராஜ். வேளாண் பட்டய படிப்பு முடித்துள்ளார். புளியம்பட்டியில் உள்ள முல்லை குழந்தைவேலு என்பவரது நிலத்தில் இயற்கை உரங்களை கொண்டு கீரை வகைகளை சாகுபடி செய்து வருகிறார். இதுகுறித்து யுவராஜ் கூறியது: ‘கீரைகள் உட்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளது. ஆனால் கீரை சாகுபடியிலும் ரசாயனத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி, அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலை, மணத்தக்காளி, சிறுகீரை என 20 வகையான கீரைகளை இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன். வழக்கமான உரங்களை பயன்படுத்தாமல், பழரசங்களை உரமாக இடுகிறேன்.  

ஒரு ஏக்கர் நிலத்தில் கீரை சாகுபடி செய்ய, இரண்டு டன் தொழு உரம் போட்டு, மண்ணில் கட்டியில்லாத அளவுக்கு உழவு செய்ய வேண்டும். கீரை சாகுபடியில் தொழுவுரம் மிக அவசியம். அடியுரமாக தொழுவுரம் கொடுத்தால், ரசாயன உரத்துக்கான செலவு மிகவும் குறையும். பத்தடி நீளம், ஆறடி அகலத்தில் பாத்திகள் எடுத்து, நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப வாய்க்கால் அமைத்து கொள்ள வேண்டும். ஓராண்டில் ஒன்பது தடவை முளைக்கீரை, மூன்று தடவை சிறுகீரை, தலா இரண்டு தடவை அரைக்கீரை, மணத்தக்காளி, தலா ஒரு தடவை பசலை மற்றும் பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி செய்கிறேன். கீரை சாகுபடியில் நிச்சயம் லாபம் உள்ளது. இயற்கை முறை சாகுபடி என்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment